Header Ads Widget

Responsive Advertisement

ஜூலை மாதத்திற்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - ஜோ பைடன்

 ஜூலை மாதத்திற்குள் 70 சதவீதம் அமெரிக்கர்களு​க்கு தடுப்பூசி செலுத்த

திட்டமிட்டுள்ளதாக, அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காதான். கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள ஜோ பைடன், ஜூலை 4 ஆம் தேதிக்குள் வயது வந்த அமெரிக்கர்களில் 70 சதவீதத்தினருக்கு, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதையும், 16 கோடி அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்துவதையும் குறிக்கோளாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இதன்மூலம் இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, இந்தியா மற்றும் பிரேசிலுக்கு உதவி வருவதாக குறிப்பிட்ட ஜே பைடன். பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, இந்தியாவிற்கு தேவையானஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments